• இன்டெக்கிரிட்டி ஐடெல் 2018

Mr. P. Karunarathna Bandara – Divisional Education Director, Thambuttegama Division 

பீ.கருணாரத்ன பண்டார, வலயக் கல்வி பணிப்பாளர், தம்புத்தேகம: கல்விச் சேவையில் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய திரு பண்டார கல்வித் திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக் முரணாக அரசியல் அதிகாரத்துடன் விடுக்கப்பட்ட கட்டளை ஏற்க மறுத்து நேர்மையுடன் செயற்பட்டார். இதனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோதும் தனது கொள்கையிலிருந்து அவர் விலகவில்லை. குறித்த அநீதிக்கெதிராக திரு.பண்டார உயர்நீதிமன்றத்தில் வழக்காடி தனக்கு சாதகமான தீர்ப்பையும் பெற்றார். அவர் அதிபராக கடமையாற்றிய காலத்திலும் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார்.

Mr. Upul Indrajith – Assistant Director (Western Province), Department of Wildlife Conservation 

உபுல் இந்திரஜித், உதவிப் பணிப்பாளர், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மேல்மாகாணம்: – இந்திரஜித் தனது தொழில்சார் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பாராட்டுக்களைப் பெற்றவர். மிரிஸ்ஸ பகுதியில் வன ஜீவராசிகளை பாதுகாப்பதற்காகவும் யானைகளை விற்பனை செய்யும் சூட்சுமத்தை தடை செய்வதற்காகவும் சாதுர்யமாக செயற்பட்டவர். தனது திணைக்களத்தில் ஏற்பட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நேர்மையை நிரூபித்திருந்தார்.

Ms. Inoka Kulathunga – Administrative Officer (Land Registration), Kandy Municipal Council 

திருமதி. இனோக்கா குலதுங்க பொது நிர்வாகத்துறையில் தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக நிரூபித்த திருமதி குலதுங்க பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் தம்வசம் பெற்றவர். ஒரு கணக்காய்வாளராக மத்திய மாகாணம், கண்டி மாநகர சபையின் பொறுப்பு கூறுவதற்கும் ஊழல்களை வெளிப்படுத்தியும் தனது சேவையை மேற்கொண்டார். எப்போதும் தனது விழுமியங்களை உறுதியாக கடைப்பிடிப்பவராவார்.

Dr. Wasantha Dissanayake – Director (Private Health Development Sector), Ministry of Health 

வைத்தியர் வசந்த திசாநாயக்க, பணிப்பாளர், தனியாள் சுகாதார சேவைகள் அபிவிருத்தி பிரிவு, சுகாதார அமைச்சு: வைத்தியர் திசாநாயக்க சுகாதாரத் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தொழில் நிபுணர். இவர் நாட்டிற்கு கிடைத்த பெரும் வசப்பிரசாதமாகும். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் வைத்தியர் திசாநாயக்க புற்றுநோயாளர்களை பராமரிப்பதில் கவனயீனமாக செயற்படுவதற்கெதிராக போராடியவர். தனது 27 வருட சேவையில் ஒரு நாளும் தொழில் பகிஸ்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாது தனது தலையாய கடமை நோயாளிகளுக்கு உதவுதல் என்பதை செயலில் காட்டியவர்.

Ms. Kamani Asoka De Silva – Senior Nurse, Kandy Teaching Hospital 

கமனி அசோக்கா டி சில்வா சிரேஷ்ட தாதி உத்தியோகத்தராக கண்டி போதனா வைத்தியசாலையில் திருமதி சில்வா கடமையாற்றுகிறார். சுய அர்ப்பணிப்பு, நேர்மை, கௌரவம், கடின உழைப்பு எனும் விழுமியங்களை தன்னகத்தே கொண்டவர். திருமதி சில்வா சுவ சஹன எனும் புற்றுநோய்க்கு எதிரான நிதியத்தை உருவாக்கி வறிய நோயாளர்களுக்கு உதவுகின்றார். தமது தாதிய கடமைக்கு அப்பால் சென்று பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் சுகாதார சேவையில் ஒரு முன்மாதிரியான பெண்ணாகவும் திகழ்கிறார்.

நேர்மைத்திறன் விருது 2018

நேர்மைத்திறன் விருது என்பது நேர்மையான அரசாங்க உத்தியோகத்தர்களைத் தேடி பிரஜைகளினால் நடத்தப்படுகின்ற உலகளாவிய பிரச்சாரமாகும். நேர்மை மற்றும் தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தினை எடுத்து விளக்குவதற்கான நேர்மைத்திறன் எனும் எண்ணக்கருவினைப் பற்றிய கலந்துரையாடலினை இது உருவாக்க நாடுகின்றது. புதிய தலைமுறையினர் மிகவூம் செயற்திறன்மிகு அரச ஊழியர்களாக ஆகுவதற்கு இது ஊக்குவிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கட்டமாக தேசிய ஊடகங்கள் மூலம் நேர்மைத்திறன் பற்றிய தொடர் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு பிரஜைகளுக்கு இந்த விருதுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஊக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நியமன காலத்தில் தொண்டர்களின் அணியொன்று நாடு முழுவதும்; பயணம் செய்து நியமனங்களை உறுதிப்படுத்துவதில உதவி செய்கிறது. நியமிக்கப்படுபவர்களின் 30 பேர்களைக்கொண்ட இறுதி பட்டியல் சுயாதீனமான நீதிபதிகளின் குழாம் ஒன்றினால் இறுதி ஐந்து பேரைக்கொண்ட இறுதி பட்டியலாகச் சுருக்கப்படுகின்றது.

இறுதியான பட்டியலில் இடம்பெறுவோரின் வரலாறு அதாவது அவர்களது பின்புலம்இ அவர்கள் என்ன செய்துள்ளனர்இ அவர்கள் எதிர்கொண்ட தடைகள்இ அவர்களின் பணியின் தாக்கம் மற்றும் அவர்களது கனவூகள் ஆகியவை காணொளியாக்கப்பட்டு தேசிய டிஜிட்டல் ஊடகத்தில் ஒலிபரப்பப்பட்டு இணையத்தளத்திலும் சமூக ஊடகத்திலும் வெளியிடப்படும். இது இணையத்திலும் இணையம் அல்லாத தளங்களிலும்; தேசிய கலந்துரையாடலினை உருவாக்குகின்றது. குறுஞ்செய்திச் சுருக்கக் குறியீடுகளின் மூலமாகவூம் இணையத்தளத்தின் மூலமாகவூம் பிரஜைகள் அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாக்களிக்கலாம்.

நடுவர் குழாம்

எம்.டி.எ.ஹரோல்ட்

TISL முன்னாள் நிறைவேற்று இயக்குனர், ஓய்வு பெற்ற பிரதி தலைமை கணக்காய்வாளர் அதிபதி

துஷித பிடிகல

விருதுபெற்ற புலனாய்வு ஊடகவியலாளர்

அமீர் இஸ்மாயில்

முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி, முன்னாள் தவிசாளர் CIABOC

மைத்ரேயி ராஜசிங்கம்

சமூக செயற்பாட்டாளர்,விழுது நிறுவன நிறைவேற்று இயக்குனர்

லலித் அம்பன்வெல

தேசிய நேர்மை விருது வெற்றியாளர் , ஓய்வு பெற்ற பிரதி தலைமை கணக்காய்வாளர் அதிபதி

செயன்முறை

மே

நடுவர் குழாமினை நியமித்தல

ஜூன் – ஜூலை

நேர்மைத்திறன் விருது நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்தல்
அச்சுஇ இலத்திரனியல் மற்றும் ஒன்லைன் ஊடகம் மூலமாக வேட்புமனுக்களைக் கோருதல்
வேட்பு மனுக்களைத் தரம் பிரித்துஇ பொருத்தமற்ற நியமனங்களைப் புறக்கணித்தல்

ஜூலை

தொண்டர்களினால் மிகவூம் பரந்தளவில் பின்புலங்கள் பரிசீலிக்கப்பட்டுஇ வழங்கப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையினைப் பரிசீலித்தல்

ஆகஸ்ட்

நடுவர் குழாமினால் பரீட்சிக்கப்பட்ட நியமனங்களை மதிப்பிட்டு இறுதி 5 வேட்பாளர்களினைத் தெரிவூ செய்தல்

ஆகஸ்ட் – செப்டெம்பர்

இறுதியாகத் தெரிவூ செய்யப்பட்டவர்களை பற்றிய காணொளிகளை தயாரித்தலும் வெளியிடுதலும்.

செப்டெம்பர்

பகிரங்க வாக்கெடுப்பு

ஒக்டோபர்

விருது வழங்கும் வைபவம்

தகைமை

தகைமை

அரசாங்க ஊழியர்கள் பொதுமக்களுடனான அவர்களது ஈடுபாட்டின் போது நேர்மைத்திறனினை வெளிக்காட்டுபவர்களாக இருக்க வேண்டுமென்பதுடன் அவர்கள் தமது சேவைகளை வழங்குவதில் தமது சக்திக்கு அப்பாற்பட்டு செயற்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதுவே போட்டிக்கான தகைமைகள் ஆகும். போட்டியில் பங்குபற்றுபவர்களது நடத்தை உன்னதமான பண்புகளைக் கொண்டவதாகவூம் மெச்சத்தக்கதாகவூம் இருக்க வேண்டுமென்பதுடன் இவர்களின் நடத்தையானது மற்றவர்களையூம் கவரக்கூடியதாகவூம் தூண்டக்கூடியதாகவூம் இருக்க வேண்டும். உள்ளுhர் மட்ட அதிகாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஓய்வூ பெற்ற உத்தியோத்தர்கள் தகைமையூடையவர்களாக ஆக மாட்டார்கள்.

விண்ணப்பதாரிஇ
• இலங்கைப் பிரஜையாக இருக்க வேண்டும்.
• அரசாங்கத்திலோஇ முகவர் நிறுவனத்திலோ அல்லது திணைக்களமொன்றிலோ ஓய்வூ பெறுவதற்கு ஐந்து வருடத்திற்கு மேற்பட்ட காலத்தை உடையவராக இருக்க வேண்டும்.
• நேர்மைத்திறன் விருதுக்காக விண்ணப்பிக்கப்படும் சந்தர்ப்பத்திலே அரசாங்கப் பதவியில் குறைந்தது 5 வருடம் பணியாற்றி இருக்க வேண்டும்.
• அரசாங்க உத்தியோகத்தராக ஃ சிவில் சேவை உத்தியோகத்தராக தனது கடமை களையூம் பொறுப்புக்களையூம் நேர்மையூடன் நிறைவேற்றியவராக இருக்க வேண்டும்.
• குற்றச்செயல்கள்இ ஊழல் மற்றும் எவ்வகையிலுமான அதிகார துஸ்பிரயோகம் ஆகியவை தொடர்பாக குற்றம் சாட்டப்படாதவராகவூம் எந்தவொரு ஒழுங்குபடுத்தல்; அமைப்பினாலும் பதவியிலிருந்து நீக்கப்படாதவராகவூம் இருக்க வேண்டும்.
• பிரச்சாரம் மற்றும் பகிரங்க வாக்கெடுப்புச் செயன்முறையில் பங்குபற்றத் தயாரானவராக இருக்க வேண்டுமென்பதுடன் நீதிபதிகள் குழாம் மற்றும் பொதுமக்களின் தீர்மானத்திற்கு இயைபுறுபவராக இருக்கவேண்டும்.
• உள்ளுhர் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்படுவதற்காக புகைப்படம் எடுப்பதற்கும் காணொளி; எடுப்பதற்கும் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும்.

தெரிவடிப்படை

நியமனமானது பின்வரும் தெரிவடிப்படைகள்; ப+ர்த்தி செய்யப்படுவதை வெளிப்படுத்த வேண்டும்.

• பொறுப்பேற்கப்பட்டுள்ள முன்னெடுப்புக்களின் தாக்கத்தின் முக்கியத்துவம்
• பின்வருவனவற்றிற்கு நீட்சி அடைகின்ற தனிப்பட்ட மட்டத்திற்கு அப்பால் எடுக்கக்கூடிய இந்த முயற்சி ஃ செயற்பாடு ஏற்;படுத்தக்கூடிய தாக்கத்தின் அளவூ

– நிறுவனம்
–  உள்ளுhர் மட்டம்
– தேசிய மட்டம்
– சர்வதேசப் மட்டம்

• இவ்வாறான தகைமைகளை கொண்டிருப்பவரினால் உறுதியானதும் கடினமானதும் என அவர் நினைக்கக்கூடிய உறுதியான சவால்களை அவர் எந்தளவிற்கு வெற்றி கொண்டுள்ளார்.
• சாதகமான பெறுபேற்றினை அடைவதற்கு மேற்கொண்ட தனிப்பட்டஇ பொருளாதாரஇ பௌதீகஇ சமூகஇ தொழில் ரீதியான அல்லது நிறுவன ரீதியான தியாகங்களின் அளவூ
• அரசாங்க சேவையில் முன்னெடுப்புகளை ஒரு ஒப்பீட்டு நியமக்குறியாகப் பயன்படுத்துவ தற்கான ஆற்றல்.
• பொறுப்பேற்கப்பட்டுள்ள முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதற்காக பதவி வழங்கியூள்ள வாய்ப்பினை அவர் ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்துகின்ற மட்டம்.
• நியமிக்கப்படுபவர் நேர்மைத் திறனுக்காகவே நியமிக்கப்படுகின்றார் என்பதில் தௌpவாக இருக்க வேண்டும். உதாரணமாக சமுதாயத்தில் வெறுமனே தனது பணியை ஆற்றுவதற்காக அல்ல.

விண்ணப்ப படிவம்

Download Application [English/Sinhala/Tamil]

සිංහල

 

DOWNLOAD PDF

ENGLISH

 

DOWNLOAD PDF

தமிழ்

 

DOWNLOAD PDF

தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இலங்கையில் அரசாங்க உத்தியோகத்தர்கள்

இலங்கை நாட்டினை சேர்ந்த ஏதேனுமொரு அரசாங்க ஊழியராக இருக்கலாம். ஆனால் அதிகாரசபைஇஅரச திணைக்கள சபைஇஅரச கூட்டுத்தாபனங்களை அல்லது பாதுகாப்பு சேவை மையத்தை சேர்ந்த ஒரு நிரந்தர ஊழியராக இருக்க முடியாது.

நேர்மைத்திறன் என்பது என்ன?

நேர்மைத்திறன் என்பது அடிப்படையில் ஊழலின்மையை விளக்கப்படுத்துகின்றது. அதனை விரிவாக விளக்கும் போது தனது கடமையை தவிர்த்து மேலதிகமான சேவைகளை மக்களுக்கு வழங்குபவராகவூம் அதே சமயம் நேர்மையாகவூம் வலுவான கோட்பாடுகளை கடைபிடிப்பவராகவூம் உள்ள ஒரு நபரை அடையாளம் கண்டுகொள்ளும் ஒரு விடயம் ஆகும்.

நியமனங்கள்

யாரும் ஒரு வேட்பாளராக நியமிக்கப்படலாம் (மாதிரி நியமனப் படிவத்திற்கு பின்னிணைப்பு யூ யினைப் பார்க்கவூம்). நியமனப்படிவம் பின்வரும் ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்படலாம்.

• இணையத்தளம் www.integrityidol.lk
• மின்னஞ்சல் idol@tisrilanka.org
• கையினால் எழுதப்பட்ட மற்றும் அச்சிடப்பட்ட பத்திரங்களை 5/1 எலிபேங்க் வீதிஇ கொழும்பு 05 இலுள்ள நிறுவனத்தில் நேரடியாகக் கையளிக்கலாம். அல்லது இந்த முகவரிக்குத் தபாலில் அனுப்பலாம்.

நியமன விண்ணப்பப்படிவம் தொடர்பாகவூம் செயன்முறை தொடர்பாகவூம் தௌpவூபடுத்தல்கள் தேவைப்படின் தயவூசெய்து எமது தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்ளவூம். 0711295295 / 0761173344.

எங்கள் கூட்டாளிகள்

location-icon

ADDRESS

Transparency International Sri Lanka,

5/1, Elibank Road,

Colombo 05,

Sri Lanka

Time: 8:30 AM to 5:00 PM [Monday to Friday]

email-icon

CONTACT

idol@tisrilanka.org

0711 295 295   -or –   076 117 33 44

SEND US A MESSAGE

If you have any questions about the event, please contact us directly. We will respond for sure.


back to top
LANGUAGE
සිංහල
ENGLISH