Mr. P. Karunarathna Bandara – Divisional Education Director, Thambuttegama Division [WINNER]

பீ.கருணாரத்ன பண்டார, வலயக் கல்வி பணிப்பாளர், தம்புத்தேகம: கல்விச் சேவையில் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றிய திரு பண்டார கல்வித் திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு முரணாக அரசியல் அதிகாரத்துடன் விடுக்கப்பட்ட கட்டளையை ஏற்க மறுத்து நேர்மையுடன் செயற்பட்டார். இதனால் அவர் இடமாற்றம் செய்யப்பட்டபோதும் தனது கொள்கையிலிருந்து அவர் விலகவில்லை. குறித்த அநீதிக்கெதிராக திரு.பண்டார உயர்நீதிமன்றத்தில் வழக்காடி தனக்கு சாதகமான தீர்ப்பையும் பெற்றார். அவர் அதிபராக கடமையாற்றிய காலத்திலும் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தார்.

Mr. Upul Indrajith – Assistant Director (Western Province), Department of Wildlife Conservation 

உபுல் இந்திரஜித், உதவிப் பணிப்பாளர், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மேல்மாகாணம்: – இந்திரஜித் தனது தொழில்சார் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பாராட்டுக்களைப் பெற்றவர். மிரிஸ்ஸ பகுதியில் வன ஜீவராசிகளை பாதுகாப்பதற்காகவும் யானைகளை விற்பனை செய்யும் சூட்சுமத்தை தடை செய்வதற்காகவும் சாதுர்யமாக செயற்பட்டவர். தனது திணைக்களத்தில் ஏற்பட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது நேர்மையை நிரூபித்திருந்தார்.

Ms. Inoka Kulathunga – Administrative Officer (Land Registration), Kandy Municipal Council 

திருமதி. இனோக்கா குலதுங்க பொது நிர்வாகத்துறையில் தன்னை ஒரு நேர்மையான அதிகாரியாக நிரூபித்த திருமதி குலதுங்க பல்வேறு விருதுகளையும் பாராட்டுக்களையும் தம்வசம் பெற்றவர். ஒரு கணக்காய்வாளராக மத்திய மாகாணம், கண்டி மாநகர சபையிற்கு பொறுப்பு கூறியும் ஊழல்களை வெளிப்படுத்தியும் தனது சேவையை மேற்கொண்டார். எப்போதும் தனது விழுமியங்களை உறுதியாக கடைப்பிடிப்பவராவார்.

Dr. Wasantha Dissanayake – Director (Private Health Development Sector), Ministry of Health 

வைத்தியர் வசந்த திசாநாயக்க, பணிப்பாளர், தனியாள் சுகாதார சேவைகள் அபிவிருத்தி பிரிவு, சுகாதார அமைச்சு: வைத்தியர் திசாநாயக்க சுகாதாரத் துறையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தொழில் நிபுணர். இவர் நாட்டிற்கு கிடைத்த பெரும் வசப்பிரசாதமாகும். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் வைத்தியர் திசாநாயக்க புற்றுநோயாளர்களை பராமரிப்பதில் கவனயீனமாக செயற்படுவதற்கெதிராக போராடியவர். தனது 27 வருட சேவையில் ஒரு நாளும் தொழில் பகிஸ்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாது தனது தலையாய கடமை என்பது நோயாளிகளுக்கு உதவுதல் என்பதை செயலில் காட்டியவர்.

Ms. Kamani Asoka De Silva – Senior Nurse, Kandy Teaching Hospital 

கமனி அசோக்கா டி சில்வா சிரேஷ்ட தாதி உத்தியோகத்தராக கண்டி போதனா வைத்தியசாலையில் திருமதி சில்வா கடமையாற்றுகிறார். தன்னல தியாகம், நேர்மை, கௌரவம், கடின உழைப்பு எனும் விழுமியங்களை தன்னகத்தே கொண்டவர். திருமதி சில்வா சுவ சஹன எனும் புற்றுநோய்க்கு எதிரான நிதியத்தை உருவாக்கி வறிய நோயாளர்களுக்கு உதவுகின்றார். தமது தாதிய கடமைக்கு அப்பால் சென்று பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் சுகாதார சேவையில் ஒரு முன்மாதிரியான பெண்ணாகவும் திகழ்கிறார்.

back to top
LANGUAGE
සිංහල
ENGLISH